மாநில செய்திகள்

சென்னை, கடலுார், புதுச்சேரியில் இன்று கனமழை + "||" + Heavy rain in Chennai, Kadalur and Pondicherry today

சென்னை, கடலுார், புதுச்சேரியில் இன்று கனமழை

சென்னை, கடலுார், புதுச்சேரியில் இன்று கனமழை
சென்னை, கடலுார், விழுப்புரம், புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்துள்ள பேட்டியில், தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போதைய சூழலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்பில்லை.

நிலப்பகுதிக்கும், கடல் பகுதிக்கும் இடையே காற்றின் அழுத்தத்தில் பெரிய வித்தியாசம் ஏற்படாததால் வளிமண்டல சுழற்சி வலுப்பெறாமல் அப்படியே நீடிக்கிறது.

வளிமண்டல சுழற்சியால் 28ந்தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். இன்று முதல் நாளை காலை 8:30 மணி வரையிலான காலகட்டத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 20 செ.மீ. வரை மிக கனமழை பெய்யும். இந்த பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், மதுரை, புதுக்கோட்டை, தேனி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.  நாளை காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...!
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. நெல்லை, தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை
கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் இன்று மதியம் முதல் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3. வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...!
வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?
கனமழை காரணமாக ஒருசில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.