மாநில செய்திகள்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை + "||" + Schools and colleges in 18 districts in Tamil Nadu will be closed tomorrow

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட 18 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


திருவண்ணாமலை,

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது.

குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேற்று மிக கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை பிற்பகலில் கனமழையாகவும், அதன் பின்னர் அதிகன மழையாகவும் கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.

சென்னை உள்பட இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், விழுப்புரம், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 18 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்; தமிழகத்தில்-146, சென்னையில்-70 தெருக்கள்
தமிழகத்தில் மொத்தம் 146 தெருக்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
2. கொரோனா பரவல்; 6 நாட்களுக்கு ரெயில்கள் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கொரோனா பரவலை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்களுக்கு 4 ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
3. எங்கள் ஆட்சியில் 2 முதல்-மந்திரிகள், 3 துணை முதல்-மந்திரிகள்... ஓவைசி அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் நாங்கள் ஆட்சியை பிடித்தால் 2 முதல்-மந்திரிகள் மற்றும் 3 துணை முதல்-மந்திரிகள் இருப்பார்கள் என ஓவைசி கூறியுள்ளார்.
4. இனி அதிகாரியிடம் காத்திருக்க தேவையில்லை சென்னை போலீசார் விடுமுறைக்கு விண்ணப்பிக்க ‘செயலி’
சென்னை போலீசார் விடுமுறைக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
5. பொங்கல் பரிசு புகார்; காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை: முதல்-அமைச்சர் எச்சரிக்கை
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தில் புகாருக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.