மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்... சுற்றுலாவாசிகள் அதிர்ச்சி...! + "||" + Kanyakumari sea suddenly recedes ... Tourists shocked ...!

கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்... சுற்றுலாவாசிகள் அதிர்ச்சி...!

கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்... சுற்றுலாவாசிகள் அதிர்ச்சி...!
கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடலால் சுற்றுலாவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


கன்னியாகுமரி,

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர்.  இவற்றில் கன்னியாகுமரியில் தொடர்மழையால் தெருவெங்கும் வெள்ளநீர் நிரம்பி காணப்படுகிறது.

இதேபோன்று குமரியில் கடந்த சில ஆண்டுகளாக, கடல் நீர் உள்வாங்குவது, நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், திடீர் கொந்தளிப்பு, அலைகளே இல்லாமல் குளம் போல இருப்பது, கடலின் நிறம் மாறுவது போன்ற பல விசயங்கள் நடந்து வருகின்றன.

கன்னியாகுமரியில் 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கடல் நீர்மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.  கன்னியாகுமரி பகுதியில் கடல் நீர்மட்டம் திடீரென தாழ்ந்து உள்வாங்கவே, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் லேசான அச்சத்திற்கு உள்ளாகினர். நேற்றும், இன்றும் என 2 நாட்கள் நீர்மட்டம் உள்வாங்கியுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன.

இதனைக்கண்ட சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  எனினும் சிலர் கடலுக்குள் சென்று பாறைகளுடன் செல்பி எடுப்பது என இருந்தனர்.  இதனை கவனித்த கடலோர போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.  தொடர் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், குமரியில் கடல்நீர் உள்வாங்கியுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. ரசிகர்களுக்கு நேரில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சிம்பு
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் குளிக்க வைக்க சிம்பு அதிரடி நடவடிக்கை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2. மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன் - சமந்தா
விவாகரத்தினால் மனம் உடைந்து இறந்து விடுவேனோ என்று பயந்தேன் என்று நடிகை சமந்தா அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.
3. இங்கிலாந்தில் சமூக பரவலான ஒமைக்ரான் பாதிப்பு; சுகாதார மந்திரி அதிர்ச்சி
இங்கிலாந்தில் ஒமைக்ரான் பாதிப்பு சமூக பரவலாகி உள்ளது என அந்நாட்டு சுகாதார மந்திரி அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
4. எனிமி பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் எனிமி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
5. இணையத்தில் வெளியான அண்ணாத்த... படக்குழுவினர் அதிர்ச்சி
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.