மாநில செய்திகள்

தமிழகத்தில் கொட்டித்தீர்த்த வடகிழக்குப் பருவமழை: சராசரி அளவைவிட கூடுதலாக 70 சதவீதம் மழை + "||" + Northeast monsoon rains in Tamil Nadu: 70% more than average rainfall

தமிழகத்தில் கொட்டித்தீர்த்த வடகிழக்குப் பருவமழை: சராசரி அளவைவிட கூடுதலாக 70 சதவீதம் மழை

தமிழகத்தில் கொட்டித்தீர்த்த வடகிழக்குப் பருவமழை: சராசரி அளவைவிட கூடுதலாக 70 சதவீதம் மழை
தமிழகத்தில் கொட்டித்தீர்த்த வடகிழக்குப் பருவமழை: சராசரி அளவைவிட கூடுதலாக 70 சதவீதம் மழை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்.
சென்னை,

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.


அதன்பின்பு சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அக்டோபர் 25-ந் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்துவருகிறது. 26-ந் தேதி வரை (நேற்று) 580.84 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது, சராசரி மழையளவான 341.33 மில்லி மீட்டரைவிட 70 சதவீதம் கூடுதல் ஆகும்.

கனமழை, அதி கனமழை காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 620 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அரியலூர், திண்டுக்கல், சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 152 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 637 குடிசைகள் பகுதியாகவும், 44 குடிசைகள் முழுமையாகவும், 120 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் ரூ.5¾ கோடி மதிப்பீட்டில் 2 பொது சுகாதார ஆய்வகங்கள்- 15 நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணி; அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்
ஈரோட்டில் ரூ.5¾ கோடி மதிப்பீட்டில் 2 பொது சுகாதார ஆய்வகங்கள் - 15 நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணியினை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
2. 2 அமைச்சர்களுக்கு கொரோனா திண்டிவனம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கும் தொற்று
தமிழகத்தில் 2 அமைச்சர் களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. திண்டிவனம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அர்ஜூனனும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
3. சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுமா? அமைச்சர் எ.வ.வேலு பதில்
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுமா? என்பது குறித்து அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.
4. பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல் பற்றி விவாதிக்க தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி சவால்
பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல் பற்றி என்னுடன் விவாதிக்க தயாரா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் சக்கரபாணி சவால் விடுத்துள்ளார்.
5. தமிழகம் முழுவதும் 3,787 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு அமைச்சர் தகவல்
சென்னையில் 9 ஆயிரத்து 237 தெருக்களில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 787 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.