மாநில செய்திகள்

ஜெயலலிதா திட்டங்களுக்கு மூடுவிழா ஜெயக்குமார் குற்றச்சாட்டு + "||" + Jayakumar accuses Jayalalithaa of closing projects

ஜெயலலிதா திட்டங்களுக்கு மூடுவிழா ஜெயக்குமார் குற்றச்சாட்டு

ஜெயலலிதா திட்டங்களுக்கு மூடுவிழா ஜெயக்குமார் குற்றச்சாட்டு
ஜெயலலிதா திட்டங்களை மூடுவிழா செய்யும் நிலையை உருவாக்கி உள்ளனர் என்று ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை,

அ.தி.மு.க. சார்பில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனு வினியோகம் நேற்று தொடங்கியது. சென்னை ராயபுரத்தில் விருப்ப மனு வினியோகத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தொடங்கி வைத்தார். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு மனுக்களை அவர் வழங்கினார்.


மகத்தான வெற்றி பெறுவோம்

இதையடுத்து ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விருப்ப மனுக்களை அனைத்து இடங்களிலும் எழுச்சியோடு தொண்டர்கள் வாங்கிச் செல்கிறார்கள். ஜனநாயக ரீதியில் தேர்தல் நடந்தால் நிச்சயமாக அ.தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் மகத்தான வெற்றியை பெறும். நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், பல்வேறு ஜனநாயக விரோத செயல்களை அரங்கேற்றியதால் செயற்கையான வெற்றியை தி.மு.க. பெற்றது. தேர்தல் ஆணையம் நியாயமாக, சுதந்திரமாக, ஜனநாயக ரீதியாக, வெளிப்படை தன்மையோடு நடக்க வேண்டும்.

இல்லை என்றால் ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையம், நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். எங்களை பொறுத்தவரை தேர்தலை முழுமையாக எதிர்கொண்டு மகத்தான வெற்றியை பெறுவோம்.

இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. தி.மு.க. அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு ஆட்சியும் 7 மாதத்திலே மக்களின் வெறுப்பை சம்பாதித்தது கிடையாது. மக்களிடையே தி.மு.க. ஆட்சி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியும், வெறுப்பும் எங்களுக்கு வாக்குகளாக மாறும்.

ஜெயலலிதா திட்டங்களுக்கு மூடுவிழா

தி.மு.க., ஆட்சிக்கு வந்து 7 மாதம் ஆகிவிட்டது. என்ன வாக்குறுதியை நிறைவேற்றினார்கள்? மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா திட்டங்கள் எல்லாம் மூடுவிழா செய்யும் நிலையை உருவாக்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாணவி லாவண்யா மரணத்தில் பா.ஜ.க.வினர் அரசியல் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள்
மாணவி லாவண்யா மரணத்தில் பா.ஜ.க.வினர் அரசியல் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.
2. பஞ்சாப் மக்களை ஏமாற்றுகிறார் கெஜ்ரிவால்; சித்து குற்றச்சாட்டு
கெஜ்ரிவால் தனது மோசமான தந்திரங்களால் பஞ்சாப் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார் என நவ்ஜோத் சிங் சித்து குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
3. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
4. லஞ்சம் தர மறுத்தேன்; சீட் மறுப்பு: காங்கிரஸ் பெண் தொண்டர் பரபரப்பு குற்றச்சாட்டு
லஞ்சம் கொடுக்க மறுத்ததற்காக சீட் ஒதுக்கவில்லை என காங்கிரஸ் பெண் தொண்டர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
5. தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகளை தி.மு.க. கொண்டு வந்ததாக ‘ஸ்டிக்கர்’ ஒட்ட முயற்சி எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகளை தி.மு.க. கொண்டுவந்ததாக “ஸ்டிக்கர்” ஒட்ட முயற்சி செய்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.