மாநில செய்திகள்

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை + "||" + Today is a holiday for schools and colleges in 18 districts in Tamil Nadu

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம் உள்பட 21 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,


தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது.

குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கிய மழை பிற்பகலில் கனமழையாகவும், அதன் பின்னர் அதிகன மழையாகவும் கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.

சென்னை உள்பட நேற்றும், இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், விழுப்புரம், சேலம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 21 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  வருகிற 29ந்தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ள சூழலில் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.




தொடர்புடைய செய்திகள்

1. இனி வரக்கூடிய காலங்களில் தமிழ் வழியில் தேர்வு - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அறிவிப்பு
இனி வரக்கூடிய காலங்களில் தமிழில் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கா. பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
2. கொரோனா அதிகரித்து வருவதால் பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைப்பு அமைச்சர் அறிவிப்பு
கொரோனா அதிகரித்து வருவதால் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுகின்றன என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
3. தபாலிலோ, இணைய வழியிலோ அனுப்பலாம்: முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்க நேரில் வரவேண்டாம்
தபாலிலோ, இணைய வழியிலோ அனுப்பலாம் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்க நேரில் வரவேண்டாம் தமிழக அரசு அறிவிப்பு.
4. விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு
மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த படத்தின் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
5. குக் வித் கோமாளி அஷ்வின் படத்தின் அடுத்த அறிவிப்பு
குக் வித் கோமாளி அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாகிய ‘என்ன சொல்ல போகிறாய்’ படம் பொங்கல் நாளன்று வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.