மாநில செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு + "||" + Chief Minister MK Stalin's study of rain-affected areas

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
விஜயராகவா சாலை, ஜி.என்.சாலையில் கொட்டும் மழையிலும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை,

வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சென்னையில் இன்று காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை நகரின் பல இடங்களில் லேசான மழையே பெய்து கொண்டிருந்தது. மாலை மீண்டும் சென்னையில் பல கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.  

சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், இன்று பல்வேறு இடங்களில் மழை பாதிப்பு இடங்களை ஆய்வு மேற்கொண்டார். சென்னை தி.நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். விஜயராகவா சாலை, ஜி.என்.சாலையில் கொட்டும் மழையிலும் மு.க ஸ்டாலின்  நேரில் ஆய்வு மேற்கொண்டார். 


தொடர்புடைய செய்திகள்

1. குடியரசு தின அலங்கார ஊர்தி தமிழகத்தில் காட்சிப்படுத்தப்படும்: மு.க ஸ்டாலின் அறிவிப்பு
டெல்லி குடியரசு தினவிழாவில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி தமிழகத்தில் காட்சிப் படுத்தப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. சென்னையில் மாவட்ட கபடி போட்டி 3 நாட்கள் நடக்கிறது
சென்னையில் மாவட்ட கபடி போட்டி 3 நாட்கள் நடக்க இருக்கிறது.
3. இன்று முதல் இரவு ஊரடங்கு: சென்னையில் 10,000 போலீசார் பாதுகாப்பு!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்படுகிறது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது சென்னை
சென்னையின் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை சாய்த்து 4-வது வெற்றியை ருசித்தது.
5. சென்னை: கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை!
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக நாளை முதல் அனைத்து கடற்கரைகளுக்கும் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.