தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தடுப்பணை அமைக்கும் பணி தீவிரம்


தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தடுப்பணை அமைக்கும் பணி தீவிரம்
x

தென்பெண்ணை ஆற்றில் கரையோரத்தில் தடுப்பணை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம்,

கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை உடைந்துள்ளது. இதனால் கரையோரம் உள்ள நிலங்களில் மண் அரிப்பு உருவாகி உள்ளது. 

தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தால் அருகே உள்ள அரசுப்பள்ளிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் விதமாக 300 மீட்டர் தொலைவுக்கு தடுப்பணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட்ட விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். 

Next Story