மாநில செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது + "||" + Former aide to Opposition leader Edappadi Palanisamy arrested

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம்,

முன்னாள் முதலமைச்சரும்  தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராக இருந்து வருபவர் மணி. இவர் அரசு பணி வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். 

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின்  தனி உதவியாளர் மணி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து மணி மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும் பணம் வாங்கி மோசடி செய்ததாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த மணி, இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் இந்த கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரின் முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மணியை கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. உண்மைச் சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது திமுக அரசு பொய் வழக்கு தொடுக்கிறது- எடப்பாடி பழனிசாமி
திமுக தலைமையிலான ஆட்சியில் காவல்நிலைய இறப்புகள் அதிகரித்துள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
2. எம்.ஜி.ஆர் 105 வது பிறந்தநாள்: 'சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்' - எடப்பாடி பழனிசாமி புகழாரம்
எம்.ஜி.ஆர் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
3. தி.மு.க. ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று இருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்படி பழனிம்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
4. நடிகர் ரஜினிகாந்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72-வது வயதில் இன்று அடியெத்து வைத்துள்ள நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
5. அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியை கைவிடவேண்டும்- எடப்பாடி பழனிசாமி
2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியினை கைவிடவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.