மாநில செய்திகள்

மேட்டூர் அணை நீர்வரத்து 20,500 கன அடியாக சரிவு + "||" + Mettur dam water level drops to 20,500 cubic feet

மேட்டூர் அணை நீர்வரத்து 20,500 கன அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து 20,500 கன அடியாக சரிவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 13-ந் தேதி இரவு அணை 120 அடியை எட்டி நிரம்பியது. அன்று முதல் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே உபரிநீராக திறந்து விடப்பட்டு வந்தது.

அந்த வகையில் மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,500 கன அடியாக குறைந்துள்ளது. அதே சமயம் அணையில் இருந்து வினாடிக்கு 20,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 93.63 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2,060 கன அடியாக குறைவு
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.21 அடியாக உயர்ந்துள்ளது.
2. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2,565 கன அடியாக குறைவு
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.56 அடியாக உயர்ந்துள்ளது.
3. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2,576 கன அடியாக உயர்வு
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.52 அடியாக உயர்ந்துள்ளது.
4. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.86 அடியாக குறைவு
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.86 அடியாக குறைந்துள்ளது.
5. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.14 அடியாக குறைவு
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,445 கன அடியில் இருந்து 4,168 கன அடியாக குறைந்துள்ளது.