தமிழகத்தில் ஓமைக்ரான் கொரோனா இல்லை: கண்காணிப்பை தீவிரபடுத்த உத்தரவு


தமிழகத்தில் ஓமைக்ரான் கொரோனா இல்லை: கண்காணிப்பை தீவிரபடுத்த உத்தரவு
x
தினத்தந்தி 28 Nov 2021 12:09 PM GMT (Updated: 28 Nov 2021 12:09 PM GMT)

தென்னாப்ரிக்கா,இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

* ஓமைக்ரான் வகை கொரோனாவை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

* கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கக்கூடாது. 

*  தென்னாப்ரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை 8 நாட்களுக்குப்பின் மீண்டும்  பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

*  கொரொனா தடுப்பூசி போடும் பணிகளை தொடர்ந்து துரிதப்படுத்தவும் மாவட்ட கலெக்டர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*  கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல் கொரோனா தடுப்பூசி கட்டுப்படுத்தும் என ஆய்வில் தெரிய   வந்துள்ளது.

*  தகுதியுடைவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து தனியார் நிறுவன செய்தி நிறுவனத்திற்கு மருத்துவத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில்,

தமிழகத்தில் ஓமைக்ரான் கொரோனா இல்லை. கொரோனா இல்லை என்று பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது முகக்கவசம் அணிய வேண்டும் என்றார். 

Next Story