ஸ்டெர்லைட் ஆலை வழக்கு - வேதாந்தா புதிதாக மனு


ஸ்டெர்லைட் ஆலை வழக்கு - வேதாந்தா புதிதாக மனு
x
தினத்தந்தி 28 Nov 2021 1:27 PM GMT (Updated: 28 Nov 2021 1:27 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது.  தூத்க்குடியில் மழையால் இயந்திரங்கள், உபகரணங்கள் உள்ள இடங்களில் நீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  இயந்திரங்கள், உபகரணங்களை சீர் செய்ய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் பெய்து வரும் மழையால் இயந்திரங்கள் துருப்பிடிக்கும் நிலையில் இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story