மாநில செய்திகள்

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும்: நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் + "||" + Request for early release: Nalini's petition should be dismissed

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும்: நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும்: நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்ைன முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை,

ராஜீவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.


இதன் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், எனவே தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் நளினி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

தமிழக அரசு பதில் மனு

அதன்படி தமிழக உள்துறை இணைச்செயலாளர் பத்மநாபன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த வழக்குகளை ஐகோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது.

அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில், தண்டனை குறைப்பு தொடர்பாக ஜனாதிபதிதான் முடிவெடுக்க தகுதியானவர் எனக்கூறி அந்த தீர்மானத்தை கவர்னர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததாகவும், அதை மத்திய அரசு சட்டப்படி பரிசீலிக்கும் என்றும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

இன்று விசாரணை

ேமலும் சுப்ரீம் கோர்ட்டு அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எனவே, நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பொங்கல் பரிசு வினியோகத்தில் ரூ.500 கோடி ஊழல்: சி.பி.ஐ. விசாரணை கேட்டு அ.தி.மு.க. வழக்கு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் சுமார் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது என்றும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்துள்ளார்.
2. விஷம் குடித்து தற்கொலை: மாணவி சம்பந்தமான வீடியோவை பதிவு செய்தவர், இன்று போலீசில் ஆஜராக வேண்டும்
பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவர் சம்பந்தமான வீடியோவை பதிவு செய்தவர் இன்று (செவ்வாய்க்கிழமை) போலீஸ் துணை சூப்பிரண்டு முன்பு ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
3. உணவில் விஷம் கலந்து கொடுத்து தி.மு.க. கவுன்சிலர் கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது
உணவில் விஷம் கலந்து கொடுத்து தி.மு.க. கவுன்சிலரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலுடன் கைது செய்யப்பட்டார்.
4. மரம் வெட்டும் தொழிலாளி கொலை
மரம் வெட்டும் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
5. வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை
ஒன்றாக மது குடித்த போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவருடைய அக்காள் கணவரை போலீசார் கைது செய்தனர்.