மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக டிக்கெட் விற்பனை + "||" + Special anointing ticket sale at Thiruthani Murugan Temple

திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக டிக்கெட் விற்பனை

திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக டிக்கெட் விற்பனை
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு அபிஷேக டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது.


திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் மூலவருக்கு தினமும் காலசந்தி, உச்சிகாலம், சாய்ரட்சை என மூன்று கால பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்படுகிறது.  இந்த அபிஷேகத்தில் பங்கேற்க பக்தர்கள், ரூ.1,500 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று கலந்து கொள்ளலாம். அதிகபட்சமாக ஒருகால பூஜைக்கு 1520 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில், கொரோனாவால் கடந்த மார்ச் 10ந்தேதியுடன் கட்டண அபிஷேகம் நிறுத்தப்பட்டது. ஆனால் கோயில் நிர்வாகம் சார்பில் அபிஷேகங்கள் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், முருகன் கோவிலில் கட்டண அபிஷேகம் செய்வதற்கு இந்து அறநிலைய துறை ஆணையர் குமரகுருபரன் நேற்று முன்தினம் அனுமதி வழங்கினார்.

இதையடுத்து, 7 மாதங்களுக்கு பின் திருத்தணி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் உச்சிகால பூஜைக்கு பக்தர்கள் கட்டண அபிஷேகத்திற்கு டிக்கெட் வழங்கப்பட்டது. ஒரு கால அபிஷேகத்திற்கு 5 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். ஒரு டிக்கெட்டுக்கு இருவர் வீதம் மொத்தம் 10 பக்தர்கள் மட்டும் மூலவருக்கு நடத்தப்படும் பஞ்சாமிர்த அபிஷேகத்தை அமர்ந்து பார்ப்பதற்கு கோயில் நிர்வாகம் அனுமதிக்கிறது. இந்த கட்டண அபிஷேகம் செய்வதற்கு பக்தர்கள் www.tirutanigaimurugan.tnhrce.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வாரச்சந்தையில் ரூ 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வாரச்சந்தையில் ரூ 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது
2. கறம்பக்குடி பகுதியில் மண்பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம் விற்பனை களைகட்டியது
பொங்கல் பண்டிகை நெருங்குவதால் கறம்பக்குடி பகுதியில் மண்பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். விற்பனையும் களைகட்டி உள்ளது.
3. அடுத்த வாரம் கொரோனா கேப்சூல் விற்பனை... விலை ரூ.35 என அறிவிப்பு
இந்தியா முழுவதும் அடுத்த வாரம் விற்பனைக்கு வரவுள்ள கொரோனா மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
4. ரூ.7¼ கோடிக்கு மதுவிற்பனை
புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.7¼ கோடிக்கு மதுவிற்பனையாகி உள்ளது.
5. சென்னையில் 58வது நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் 58வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.