மாநில செய்திகள்

திரைப்பட விமா்சனங்களை தவிா்க்க பா.ஜ.க.வினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல் + "||" + Annamalai instructs BJP to avoid film scams

திரைப்பட விமா்சனங்களை தவிா்க்க பா.ஜ.க.வினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

திரைப்பட விமா்சனங்களை தவிா்க்க பா.ஜ.க.வினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்
திரைப்பட விமா்சனங்களை தவிா்க்கும்படி கட்சி நிா்வாகிகளை தமிழக பா.ஜ.க. தலைவா் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளாா்.


சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவா் கே. அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்கு புறம்பாக கருத்துகள் வந்தால் அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை.

திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு. அவா்கள் பாா்த்த, படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சியை சேர்ந்த சகோதர, சகோதரிகள், சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமா்சிக்க தொடங்கியுள்ளனா்.

கட்சியின் முக்கிய பதவியில் இருக்கும் யாா் சொல்லும் கருத்தும், கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எப்போது எதற்காக பேச வேண்டுமோ அப்போது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில், பேசுவதை தவிா்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்.

நமது இலக்கு, நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாக செயல்படுங்கள். எனவே, திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமா்சனங்கள் விவாதங்கள், கருத்துகளை கட்சி நிா்வாகிகள் தவிா்க்க வேண்டும் என கூறியுள்ளாா்.


தொடர்புடைய செய்திகள்

1. 68 தமிழக மீனவர்களையும் மீட்க துரித நடவடிக்கை மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
புத்தாண்டை குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில் 68 தமிழக மீனவர்களையும் மீட்க துரித நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
2. கொரோனா பாதிப்பு; கலெக்டர்களுக்கு சுகாதார துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கூடினால் அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது.
3. வாக்காளர் பட்டியல் பணிகளில் அ.தி.மு.க.வினர் முனைப்போடு செயல்பட வேண்டும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
வாக்காளர் பட்டியல் பணிகளில் அ.தி.மு.க.வினர் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளனர்.
4. அரியர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க கூடாது ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
அரியர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க கூடாது ஐகோர்ட்டு அறிவுறுத்தல்.
5. உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்
உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்.