மாநில செய்திகள்

துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழில் அதிபர் படுகாயம் தற்கொலை முயற்சியா? போலீசார் விசாரணை + "||" + Did the industrialist attempt to commit suicide by firing a shotgun? Police investigation

துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழில் அதிபர் படுகாயம் தற்கொலை முயற்சியா? போலீசார் விசாரணை

துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழில் அதிபர் படுகாயம் தற்கொலை முயற்சியா? போலீசார் விசாரணை
துப்பாக்கி குண்டு பாய்ந்து சென்னையில் தொழில் அதிபர் பலத்த காயம் அடைந்தார். அவர் தற்கொலை முயற்சி செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,

சென்னை அடையாறு, எல்.பி.சாலை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 39). தொழில் அதிபரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி பெயர் பைரவி (35). டாக்டரான இவர், முக அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணர். போயஸ் கார்டன் பகுதியில் கிளினிக் வைத்துள்ளார். இருவரும் முதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்கள். ஆளுக்கொரு குழந்தையும் உள்ளனர்.


இந்த நிலையில் இருவரும் மனமொத்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தனர். பைரவி கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்தது. தனது பெற்றோர் வீட்டில் பிரசவத்துக்காக சென்றுள்ளார்.

குண்டு பாய்ந்து காயம்

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த செந்தில், நேற்று முன்தினம் இரவு தனது தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் காயத்துடன் கிடந்தார். அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது தொடர்பாக சாஸ்திரிநகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

உரிய அனுமதி பெற்ற கைத்துப்பாக்கியை தனது பாதுகாப்புக்காக செந்தில் வைத்திருந்தார். அந்த துப்பாக்கியை துடைத்தபோது, அது வெடித்து, தனது தோள்பட்டையில் குண்டு பாய்ந்து விட்டது என்று செந்தில் போலீஸ் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சியா?

நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியை துடைக்க முற்பட்டது ஏன்? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். அவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏதும் ஏற்பட்டதா என்று போலீஸ் தரப்பில் தொ டர்ந்து விசாரணை நடக்கிறது. அவரது துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.500 கோடி கிராவல் மண் எடுத்ததாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான புகாரில் அதிகாரிகள் மீது விசாரணை
ரூ.500 கோடி மதிப்புள்ள கிராவல் மண்ணை எடுத்ததாக முன்னாள் துணை முதல்-அமைச்சர் மீதான புகாரில், அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதி வழங்குவது குறித்து தமிழக அரசு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. மெரினாவில் கிடந்த அரசு ஊழியர் உடல் கொலையா? போலீஸ் விசாரணை
மெரினாவில் கிடந்த அரசு ஊழியர் உடல் கொலையா? போலீஸ் விசாரணை.
3. கோவையில் 133 கிலோ குட்கா பறிமுதல்
கோவையில் 133 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
4. கோர்ட்டில் சரணடைந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
ஈரோடு ஜவுளிக்கடை உரிமையாளர் கடத்தல் வழக்கில் கோர்ட்டில் சரணடைந்தவரை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மீட்கப்பட்டது.
5. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற புகார்கள் வந்த அரைமணி நேரத்தில் நேரடி விசாரணை
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற புகார்கள் மீது, புகார்கள் வந்த அரைமணி நேரத்தில், சம்பந்தப்பட்ட அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.