மாநில செய்திகள்

தமிழகத்தில் மழைக்கு பலியான 59 பேர் குடும்பத்துக்கு ரூ.2¼ கோடி நிவாரணம் + "||" + Rs 20 crore relief for the families of 59 rain victims in Tamil Nadu

தமிழகத்தில் மழைக்கு பலியான 59 பேர் குடும்பத்துக்கு ரூ.2¼ கோடி நிவாரணம்

தமிழகத்தில் மழைக்கு பலியான 59 பேர் குடும்பத்துக்கு ரூ.2¼ கோடி நிவாரணம்
தமிழகத்தில் மழைக்கு பலியான 59 பேர் குடும்பத்துக்கு ரூ.2¼ கோடி நிவாரணம் தமிழக அரசு அறிவிப்பு.
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்துநவம்பர் 28-ந்தேதி (நேற்று) வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தொடர் மழையால் இறந்த 59 பேர் குடும்பத்திற்கு ரூ.2 கோடியே 36 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.


அதேபோல், 2 ஆயிரத்து 943 கால்நடைகள் இறந்ததால் அதற்காக ரூ 3 கோடியே 43 லட்சத்து 71 ஆயிரமும், காயமடைந்த 13 பேருக்கு நிவாரண உதவியாக ரூ.55 ஆயிரத்து 900 மற்றும் மழை வெள்ளத்தால் 24 ஆயிரத்து 810 குடிசைகள் சேதமடைந்தன. அதற்கு இழப்பீடாக ரூ.10 கோடியே 17 லட்சத்து 21 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.15 கோடியே 97 லட்சத்து 47 ஆயிரத்து 900 வழங்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கதவை தட்ட வேண்டாம்; திறந்தே இருக்கிறது!
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது.
2. சேலம் 8 வழிச்சாலை திட்ட அச்சத்தை போக்க தமிழக அரசு நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்
சேலம் 8 வழிச்சாலை திட்ட அச்சத்தை போக்க தமிழக அரசு நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
3. அரசு துறைகளில் தமிழக இளைஞர்களுக்கே பணி: அனைத்து போட்டி தேர்விலும் தமிழ்மொழி தகுதித்தாள் தேர்ச்சி கட்டாயம்
அரசு துறைகளில் உள்ள அனைத்து பணியிடங்களிலும் தமிழக இளைஞர்களை நியமனம் செய்யும் பொருட்டு, அனைத்துப் போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சியை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.
4. பாரதியார் நினைவு நூற்றாண்டு: திருவல்லிக்கேணியில் 44 வாரங்களுக்கு தொடர் நிகழ்ச்சி
பாரதியார் நினைவு நூற்றாண்டு: திருவல்லிக்கேணியில் 44 வாரங்களுக்கு தொடர் நிகழ்ச்சி தமிழக அரசு அறிவிப்பு.
5. தமிழக, கேரள மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழக, கேரள மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.