மாநில செய்திகள்

வேலூரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு + "||" + Moderate earthquake in Vellore 3 6 on the Richter scale

வேலூரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு

வேலூரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு
வேலூர் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.
வேலூர், 

தமிழகத்தின் வேலூரில் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நில அதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளநிலையில், பெரும்பாலான மக்களால் உணரப்படவில்லை. தற்போது இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூரில் பிரபல நகைக்கடையில் பல கோடி தங்க - வைர நகைகள் கொள்ளை
வேலூரில் பிரபல நகைக்கடையில் பின்பக்க சுவரில் துளையிட்டு பல கோடி தங்க - வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
2. பொரித்த மீன் சாப்பிட்ட 2 குழந்தைகள் வாந்தி, வயிற்றுப்போக்கில் பலி
குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
3. வேலூர், காட்பாடியில் மழைநீரை அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
வேலூரில் மழைநீரை அப்புறப்படுத்தக்கோரி 2 இடங்களில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் செய்தனர். அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. வேலூர்: கனமழையால் வீடு இடிந்து விழுந்து விபத்து - குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
வேலூரில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 4 குழந்தைகள் உள்பட மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5. வேலூரில் 3,510 இலங்கை அகதிகளுக்கு குடியிருப்பு வீடுகள் - மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
3,510 இலங்கை அகதிகளுக்கு குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை வேலூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.