மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...! + "||" + Rain Continues in Next 3 Hours in several Parts of Tamilnadu

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...!

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...!
அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
 
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சை, கரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மற்றும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த்துள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. டெல்டா, தென்கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...!
டெல்டா மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
3. அறுவடைக்கு தயரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின- விவசாயிகள் கண்ணீர்; சேதம் கணக்கெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
4. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
ஜனவரி 4ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் மட்டும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு
5. கொட்டி தீர்த்த கனமழை ...! சென்னையில் வெள்ளத்தில் மிதந்த 145 இடங்கள் ; 4 சுரங்கப்பாதைகள் மூடல்
சென்னையில் நேற்று மதியம் முதல் இரவு வரை சுமார் 10 மணிநேரம் விடாமல் கொடூரமாக மழை பெய்தது