மாநில செய்திகள்

சிவசங்கர் பாபா வீட்டின் ரகசிய அறையில் சோதனை + "||" + Check in the secret room of Sivashankar Baba's house

சிவசங்கர் பாபா வீட்டின் ரகசிய அறையில் சோதனை

சிவசங்கர் பாபா வீட்டின் ரகசிய அறையில் சோதனை
சிவசங்கர் பாபா வீட்டின் ரகசிய அறையில் சோதனை.
சென்னை,

நடன சாமியார் என்று அழைக்கப்படும் சிவசங்கர் பாபா மீது, அவரது பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் 5 பேர் பாலியல் புகார் கொடுத்தனர். சிவசங்கர் பாபா தங்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சிவசங்கர் பாபா மீது 4 போக்சோ வழக்குகளும், ஒரு பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.


சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்குகளை பதிவு செய்து விசாரித்தனர். 5 வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிவசங்கர் பாபா வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

இந்தநிலையில் சிவசங்கர் பாபா வீட்டில் உள்ள ரகசிய அறை ஒன்றில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் திறந்து சோதனை போட்டனர். கூடுதல் ஆதாரங்களை கைப்பற்றுவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மின்சார ரெயில்களில் பயணிகள் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளனரா? ரெயில்வே அதிகாரிகள் சோதனை
சென்னையில் மின்சார ரெயில் பயணிகள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா? என ரெயில்வே அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
2. வாகன சோதனையின்போது லாரி டிரைவரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின்போது லாரி டிரைவர் மீது தாக்குதல் நடத்திய போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
3. இந்திய இளம் ஓட்டப்பந்தய வீராங்கனை ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்
ஓட்டப் பந்தய பிரிவில் இந்தியாவின் வேகமான பெண் ஆக இருக்கும் தரண்ஜித் கவுர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தார்.
4. விடுதியில் விபசாரம்; 5 பேர் கைது
திருவள்ளூர் நகரின் முக்கிய சாலையில் உள்ள விடுதியில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்த போலீசார் விடுதியில் திடீர் சோதனை செய்தனர்.
5. மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை?
மாஸ்டர் பட தயாரிப்பாளர் மற்றும் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.