மாநில செய்திகள்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மினி பஸ் சேவை: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் + "||" + Mini bus service from metro stations: MK Stalin launches today

மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மினி பஸ் சேவை: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மினி பஸ் சேவை: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை, மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 12 மினி பஸ்கள் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னை,

சென்னையில் மினி பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருவதால், மெட்ரோ ரெயில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடுதல் மினி பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 210 மினி பஸ்களில் 66 மினி பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் மினி பஸ் பயணிகளின் பயன்பாடு குறைந்து, நிதி இழப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 144 மினி பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த மினி பஸ்களை சிறந்த முறையில் பயன்படுத்திட பிற பகுதிகளிலிருந்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இயக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,  சென்னை, மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 12 மினி பஸ்கள் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கிறார். ஆலந்தூர், விமான நிலையம், கோயம்பேடு, திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ்கல் இயக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
2. மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகள் ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கடந்த ஆட்சியில் தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகள் ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. தமிழ்நாட்டில் 7 இடங்களில் அடுத்த மாதம் அகழாய்வு பணி தொடக்கம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 7 இடங்களில் அடுத்த மாதம் அகழாய்வு பணி தொடங்க இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4. தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக நிச்சயமாக மாற்றுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
நல்லாட்சியின் அடையாளத்தை 6 மாதத்திலே பெற்றிருக்கிறோம் என்றும் தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக நிச்சயமாக மாற்றுவோம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
5. கோவில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என்னென்ன? மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து அறநிலையத்துறை குழு உறுப்பினர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.