மாநில செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Court orders allotment of one acre of land for tomato lorries at Coimbatore market

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
உச்சத்தில் உள்ள தக்காளி விலையை குறைப்பதற்காக வெளிமாநிலத்தில் இருந்து வரும் தக்காளிகளை லாரிகளில் இருந்து இறக்குவதற்கு கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக ஒதுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

கோயம்பேடு மார்க்கெட்டில், தக்காளி லாரிகளை கொண்டு வந்து நிறுத்தி, தக்காளியை இறக்குவதற்கு 85 சென்ட்டில் தக்காளி மைதானம் உள்ளது. இதுதான் கொரோனா அதிகம் பரவும் இடம் என்று அறிவித்து, இந்த மைதானத்தை அதிகாரிகள் மூடி விட்டனர்.


இதை எதிர்த்து தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில், தற்போது தக்காளியின் விலை உச்சத்தில் உள்ளது. இந்த மைதானத்தை திறந்தால், வெளிமாநிலங்களில் இருந்து தக்காளியை லாரியில் கொண்டு வந்து இறக்கி, ஒரு கிலோ தக்காளியை ரூ.40-க்கு பொதுமக்களுக்கு வழங்க முடியும் என்று கூறியிருந்தனர்.

குழப்பம் ஏற்படும்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், பொதுநலன் கருதி தக்காளி விலை குறையும் வரை சில வாரங்களுக்கு லாரிகளை நிறுத்த அனுமதிக்க முடியுமா? என்று மார்க்கெட் கமிட்டிக்கும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 14-வது நுழைவு வாயில் அருகே தற்காலிகமாக நிலம் ஒதுக்கி தக்காளி லாரிகளுக்கு அனுமதி வழங்குவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் வக்கீல் சிவா, “அந்த இடம் ஏற்கனவே, கொத்தமல்லி தழை மற்றும் புதினா வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம். அந்த இடத்தை தக்காளி வியாபாரிகளுக்கு ஒதுக்கினால், தேவையில்லாத குழப்பம் ஏற்படும்” என்றார்.

இன்று முதல்

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “கடந்த சில வாரங்களாக பெய்து வரும் இடைவிடாத மழையினால், தக்காளியின் விலை அதி பயங்கரமாக உயர்ந்துள்ளது. எனவே, தக்காளி வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், விலையும் குறையத் தொடங்கிவிடும். எனவே, கோயம்பேடு மார்க்கெட்டில், லாரியில் இருந்து தக்காளியை இறக்கவும், காலி தக்காளி பெட்டிகளை ஏற்றவும் ஒரு ஏக்கர் நிலத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணி முதல் 4 வாரத்துக்கு அதிகாரிகள் ஒதுக்க வேண்டும். அதேநேரம், லாரியில் இருக்கும் தக்காளிகளை அதில் இருந்தபடியே மொத்தமாகவோ, சில்லரையாகவோ விற்பனை செய்யக்கூடாது. இதை மீறும் வியாபாரிகளின் லாரிகளை அந்த இடத்துக்கு அனுமதிக்கக்கூடாது. விசாரணையை அடுத்த மாதம் 15-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்” என்று உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைத்து உத்தரவிட முடியாது என்றும், இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டை மனுதாரர்கள் அணுகலாம் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்து நீக்கம் ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவு
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கண்டன கருத்துகளை நீக்கி சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
3. குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி நிராகரிப்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. பிரபல ரவுடி படப்பை குணாவை 31ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு
பிரபல ரவுடி படப்பை குணாவை 31ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
5. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க ஐகோர்ட்டு மறுப்பு
5 மாநில சட்டசபை தேர்தலே நடைபெறும்போது தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ள சென்னை ஐகோர்ட்டு, கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்தலாம் என்று கூறியுள்ளது.