மாநில செய்திகள்

சட்டவிரோதமாக பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு + "||" + End to the practice of placing banners illegally - Court order to the Government of Tamil Nadu

சட்டவிரோதமாக பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சட்டவிரோதமாக பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சட்டவிரோதமாக பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண் டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

விழுப்புரத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் அமைச்சரை வரவேற்று பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்ட தினேஷ் என்ற 12 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான். இந்த சிறுவனின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், மோகன்ராஜ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தி.மு.க., தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஐகோர்ட்டு பேனர்கள் வைக்க கூடாது என்று உத்தரவிட்டு உள்ளதால் பேனர்கள் வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து விட்டார். அவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்றபோதுகூட பேனர்கள் வைக்கவில்லை’ என்று கூறினார்.

முற்றுப்புள்ளி

மேலும், “விழுப்புரம் சம்பவத்தை பொறுத்தவரை சிறுவனை பணிக்கு அமர்த்தியது ஒப்பந்ததாரர்தான். அவர் தரப்பில் சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது” என்றும் அவர் வாதிட்டார்.

அரசு தரப்பு வக்கீல், “இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனிலும் வெளியில் வந்து விட்டார்” என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சட்டவிரோதமாக பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பேனர் வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல, அனைத்து கட்சிகளுக்கும்தான். அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், மற்றவர்களும் பேனர் வைக்கிறார்கள்” என்று கருத்து கூறி, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைத்து உத்தரவிட முடியாது என்றும், இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டை மனுதாரர்கள் அணுகலாம் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்து நீக்கம் ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவு
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கண்டன கருத்துகளை நீக்கி சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
3. குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி நிராகரிப்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. பிரபல ரவுடி படப்பை குணாவை 31ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு
பிரபல ரவுடி படப்பை குணாவை 31ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
5. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க ஐகோர்ட்டு மறுப்பு
5 மாநில சட்டசபை தேர்தலே நடைபெறும்போது தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ள சென்னை ஐகோர்ட்டு, கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்தலாம் என்று கூறியுள்ளது.