கடலூர் அருகே பேருந்தை வழிமறித்து அரிவாளால் தாக்குதல் - 3 பேர் கைது
பட்டப்பகலில் போக்குவரத்து மிகுந்த சாலையில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர்,
கடலூரில் இருந்து புதுவை நோக்கி சென்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பெரியகாட்டுப்பாளையம் எனும் இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் பேருந்தை வழிமறித்தனர்.
அரிவாளை காண்பித்து ஓட்டுநரை மிரட்டிய அவர்கள் கண்ணாடியை சேதப்படுத்தியதோடு, நடத்துனரிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றனர். பட்டப்பகலில் போக்குவரத்து மிகுந்த சாலையில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்த கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர், மேற்பார்வையில் ரெட்டிச்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான தனிப்படையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், மேற்கூறிய சம்பவம் தொடர்பாக இன்று காலை பெரியகாட்டுப் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயமூர்த்தி மகன் பிரித்தி (எ) பிரித்விராஜன், கதிர்வேல் மகன் சீனுவாசன், புதுச்சேரி மாநிலம் பாகூரைச் சேர்ந்த வேம்பன் மகன் மருது (எ) மருதுநாயகம் ஆகிய மூவரையும் மடக்கி பிடித்து அவர்கள் பயன்படுத்திய அரிவாள், இரண்டு இரு சக்கர வாகனங்களை கைப்பற்றியதோடு மூன்று பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story