தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை


தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு  நாளை விடுமுறை
x
தினத்தந்தி 1 Dec 2021 8:38 PM IST (Updated: 1 Dec 2021 8:38 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தாலுகா, மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ள நீர் அதிகரித்து விளை நிலங்களை சூழ்ந்துள்ளது. அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

மழையை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை  அறிவித்து வருகின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தாலுகா, மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ்  தெரிவித்துள்ளார்.


Next Story