நகைக்கடன் முறைகேடு: ஆய்வு பணிகள் 95 சதவீதம் நிறைவு அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்


நகைக்கடன் முறைகேடு: ஆய்வு பணிகள் 95 சதவீதம் நிறைவு அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2021 12:25 AM IST (Updated: 2 Dec 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

நகைக்கடன் முறைகேடு: ஆய்வு பணிகள் 95 சதவீதம் நிறைவு அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட நகைக்கடனில் முறைகேடு நடைபெற்றது. அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அதில் 95 சதவீதம் பணி நிறைவு பெற்றுள்ளது.

கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் ரூ.2,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் 7 லட்சம் விவசாயிகள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு இதுவரை ரூ.700 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான 12 சதவீத வட்டி 7 சதவீதமாக ஆக குறைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

தமிழகம் முழுவதும் 75 கூட்டுறவு மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story