தனியார் நிதி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


தனியார் நிதி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 2 Dec 2021 12:52 AM IST (Updated: 2 Dec 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிதி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

புதுச்சேரி வள்ளலார் சாலையில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையத்தை சேர்ந்த கார்வண்ணன் (வயது 35) கடன்பெற்று 4 சக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்தநிலையில் அவர் 10 மாதத்திற்கான தவணை தொகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. எனவே அந்த வாகனத்தை நிதி நிறுவனத்தினர் பறிமுதல் செய்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கார்வண்ணன், நிதி நிறுவன மேலாளர் சக்திவேலு (37) என்பவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் சக்திவேலுவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், நிதி நிறுவனத்தின் மீது வெடிகுண்டு வீசுவதாக மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து பெரியகடை போலீசில் சக்திவேலு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்வண்ணனை வலைவீசி தேடி வருகின்றனர். தனியார் நிதி நிறுவனத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story