டிசம்பர் 7: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்..!
நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை,
பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு. க.வில் ‘ஒற்றை தலைமை’ என்ற பேச்சுக்கே இடமில்லை. இனி ‘இரட்டை தலைமை’தான் அ.தி.மு.க.வை தொடர்ந்து வழிநடத்தும் என்பதை உறுதி செய்யும் வகையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும், 8 ஆம் தேதியன்று தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பிரிவு - 2ன்படி "கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும்" என்ற விதிமுறைக்கேற்ப, கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கீழ்க்கண்ட அட்டவணைப்படி நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையாளர்கள்:
பொன்னையன் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
பொள்ளாச்சி வி. ஜெயராமன், எம்.எல்.ஏ கழக தேர்தல் பிரிவுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
வேட்பு மனு தாக்கல்:
3.12.2021 வெள்ளிக் கிழமை முதல் 4.12.2021 சனிக் கிழமை (காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை).
வேட்பு மனு பரிசீலனை:
5.12.2021- ஞாயிற்றுக் கிழமை காலை 11.25 மணி
வேட்பு மனு திரும்பப் பெறுதல்
6.12.2021 திங்கட் கிழமை மாலை 4 மணி வரை.
தேர்தல் நாள்:
7.12.2021- செவ்வாய்க் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு அறிவிப்பு
8.12.2021 புதன் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/8HEX2QZjTD
— AIADMK (@AIADMKOfficial) December 2, 2021
Related Tags :
Next Story