'அம்மனுக்கு தடுப்பூசி ஆகாது..' தடுப்பூசி போட மறுத்து சாமியாடிய மூதாட்டி!


அம்மனுக்கு தடுப்பூசி ஆகாது.. தடுப்பூசி போட மறுத்து சாமியாடிய மூதாட்டி!
x
தினத்தந்தி 2 Dec 2021 4:35 PM IST (Updated: 2 Dec 2021 4:35 PM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி வேண்டாம்" முதல்வருக்கு கூட தெரியும் என தடுப்பூசி போடவந்த ஊழியர்களிடம் சாமியாடிய மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.


புதுவை

புதுவையில் இன்று  காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 389 பேருக்கு கொரோனா தொற்றுபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 33 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 998 ஆக உயர்ந்துள்ளது. தற்போது  மருத்துவமனைகளில் 59 பேர், வீடுகளில் 240 பேர் என 299 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 23 பேர் குணமடைந்தனர்.

புதுவையில் தொற்று பரவல் 1.38 சதவீதமாகவும், குணமடைவது 98.32 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 3 ஆயிரத்து 87 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 3 ஆயிரத்து 665 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 12 லட்சத்து 41 ஆயிரத்து 456 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தற்போது வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா  தடுப்பூசி போட புதுச்சேரி மேட்டுப்பாளையம் மக்கள் மறுத்துவிட்டனர்.  தடுப்பூசி  போட சென்ற  போது ஒரு மூதாட்டி சாமி வந்தது போல் ஆடினார்.இதனால் ஊழியர்கள் பயந்து திரும்பினர். 

Next Story