விபசாரம் நடந்த அழகு நிலையத்துக்கு சீல்


விபசாரம் நடந்த அழகு நிலையத்துக்கு சீல்
x
தினத்தந்தி 2 Dec 2021 11:33 PM IST (Updated: 2 Dec 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் விபசாரம் நடந்த அழகு நிலையத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்

புதுவையில் விபசாரம் நடந்த அழகு நிலையத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
விபசாரம்
புதுச்சேரி அண்ணாநகர் மெயின்ரோட்டில் விபசாரம் நடப்பதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அழகுநிலையம், ஸ்பா என்ற பெயரில் உரிமம் பெற்று விபசாரம் நடப்பது தெரியவந்தது. 
இதனை தொடர்ந்து அழகு நிலையத்தை நடத்திய சாரம் பாலாஜி நகரை சேர்ந்த மகி (வயது 31), அவரது மனைவி விஜயலட்சுமி (31) ஆகியோரையும் விபசாரத்தில் ஈடுபட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த ஜான்சன் ஜோசப் (28), அஸ்வின் அந்தோணி (25), நதிர்ஷா (26) ஆகியோரையும் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து 3 பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
‘சீல்’ வைப்பு
இந்த நிலையில் அந்த அழகுநிலையத்திற்கு சீல் வைக்க வேண்டும் என்று புதுவை காவல்துறை சார்பில் நகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் சிவக்குமார் உத்தரவின் பேரில் வருவாய் அதிகாரி சாம்பசிவம் மற்றும் அதிகாரிகள் நேற்று மாலை அங்கு சென்று விபசாரம் நடந்த அழகு நிலைய்திற்கு சீல் வைத்தனர்.

Next Story