அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் தேர்தல்: மனுதாக்கல் இன்று தொடக்கம்
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் 7-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவு 8-ந்தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தநிலையில் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் எதிரொலித்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ‘ஒற்றை தலைமை’ விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அ.தி.மு.க. தொடர்ந்து இரட்டை தலைமையின் கீழ் தான் இயங்கும் என்பது உறுதி செய்யப்பட்டது.
தேர்தல் அட்டவணை
இதுதொடர்பாக கட்சியின் சட்டத்திட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திட்டத்தின்படி, ‘அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு உள்கட்சி தேர்தல் நடத்தப்படும். கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்கின் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று மனுதாக்கல்
அ.தி.மு.க. சட்டத்திட்ட விதிகளின்படி கட்சியின் அமைப்புகளின் பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும்’ என்ற விதிமுறைக்கு ஏற்ப அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
தேர்தல் கமிஷனர்களாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் 3-ந்தேதி (இன்று), 4-ந்தேதி (நாளை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 5-ந்தேதி காலை 11.25 மணியளவில் நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு 6-ந்தேதி (மாலை 4 மணி) கடைசி நாள் ஆகும்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை 8-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்தல் முடிவு அன்றைய தினம் வெளியாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்
அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் எவ்வாறு நடைபெறும்? என்று இந்த தேர்தலை நடத்தும் பொள்ளாச்சி ஜெயராமனிடம் கேட்டதற்கு, ‘ஜனநாயக ரீதியாக அ.தி.மு.க.வின் சாதாரண தொண்டர்களும் பங்கேற்கும் வகையில் உள்கட்சி தேர்தல் நடைபெறும்’ என்று பதிலளித்தார்.
ஜெயலலிதா இருந்தவரையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிட முன்வந்தது இல்லை. எனவே அவரே போட்டியின்றி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு வந்தார். அதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தவிர அ.தி.மு.க.வில் வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை என்றால், போட்டியின்றி இவர்களே இப்பதவிக்கு மீண்டும் வருவார்கள்.

Related Tags :
Next Story