முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையம் - மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
சென்னை,
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கான மாநில விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் வழங்கினார். மேலும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மறுவாழ்வு இல்லத்திற்கான புதிய கட்டிடத்தையும் காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
Related Tags :
Next Story