பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரில் ஒரு குழந்தை உட்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 8 பேரும் கிண்டி கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர் உட்பட யாருக்கும் எவ்வித அறிகுறிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஓமைக்ரான் உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களின் மாதிரிகள் மரபியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன்பு லண்டனில் இருந்த போது தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் முடித்து திரும்பிய நிலையில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story