ஏர் இந்தியா ஊழியர்களை வெளியேற்ற தடை; சென்னை ஐகோர்ட்டு
ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் டாடாவுக்கு விற்க தடை விதிக்கக் கோரி, ஏர் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
சென்னை,
ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றவும், மருத்துவ சேவையை நிறுத்தவும் இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் டாடாவுக்கு விற்க தடை விதிக்கக் கோரி, ஏர் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், மத்திய அரசு, ஏர் இந்தியா, டாடா நிறுவனம் பதிலளிக்கவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story