திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் செல்ல தடை - மாநகராட்சி நிர்வாகம்
திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் செல்ல தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்,
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மெகா தடுப்பூசி முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 12 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். மேலும், மதுரை மாவட்டத்திலும் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது, திண்டுக்கல்லிலும் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் வர தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story