சாலை விபத்தில் மயங்கிய மாணவன்: முதலுதவி செய்து இதயத்துடிப்பை மீட்ட செவிலியர்!


சாலை விபத்தில் மயங்கிய மாணவன்: முதலுதவி செய்து இதயத்துடிப்பை மீட்ட செவிலியர்!
x
தினத்தந்தி 3 Dec 2021 10:41 PM IST (Updated: 3 Dec 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் மூச்சு, பேச்சு இன்றி மயங்கிய மாணவனை உடனடி சிகிச்சையால் இதயத்துடிப்பை மீட்ட செவிலியருக்கு பாராட்டுகள் குவிகிறது.

மன்னார்குடி,

மன்னார்குடி பட்டுக்கோட்டை சாலை நெடுவாக்கோட்டை அருகில் சாலை விபத்தில் பைக்கில் அடிப்பட்ட கருவாக்குறிச்சி சேர்ந்த மாணவன் வசந்தை  (வயது 20) அவ்வழியாக சென்ற அரசு மருத்துவமனை செவிலியர் வனஜா உடனடியாக மாணவருக்கு சிபிஆர் சிகிச்சை செய்து இதயதுடிப்பை மீட்டு உயிரிரைக்காப்பாற்றினார். 108 ஆம்புலன் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சாலை விபத்தில் உயிருக்கு போராடிய மாணவரை துரிதமாக செயல்பட்டு இதயத்துடிப்பை  மீட்ட செவிலியருக்கு  சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.

Next Story