கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
வெப்பச்சலனம் காரணமாக இன்று தென்மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று றிவித்தது.
இதற்கிடையில், தென் மாவட்ங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாமக்கல், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாமக்கல், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிசம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story