கனமழை எதிரொலி; மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி சூழ்ந்த வெள்ளம்


கனமழை எதிரொலி; மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி சூழ்ந்த வெள்ளம்
x
தினத்தந்தி 4 Dec 2021 7:22 PM IST (Updated: 4 Dec 2021 7:22 PM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி கனமழையை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.




மதுரை,

நாட்டில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் மழை பெய்து சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மற்றும் கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மதுரையில் கனமழையால் கே. புதூர், அண்ணாநகர், கோரிப்பாளையம், தல்லாகுளம், சிம்மக்கல், தெப்பக்குளம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளநீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது.  வைகை பாலத்திலும் வெள்ளநீரால் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.

இந்த நிலையில், தொடர் கனமழையால் மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.  இதனால் கோவில், கடைகள் மற்றும் அந்த பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


Next Story