மாநில உரிமையை பறிக்கும் அணை பாதுகாப்பு சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும்: சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அணை பாதுகாப்பு சட்ட மசோதா என்ற பெயரில் அணைகள் மீதான மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்திட முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் ஒப்பந்தங்கள் யாவும் தள்ளுபடி செய்யும் வகையில் இச்சட்ட வரைவு வடிவமைக்கப்பட்டிருப்பதால் அண்டை மாநிலங்களுடனான தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் மேலும் சிக்கலுக்குள்ளாகும்.
முல்லைப்பெரியாறு போன்ற அணைகள் கேரளாவில் அமையப் பெற்றிருந்தாலும் அவை தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. பரம்பிக்குளம் அணையானது கேரளாவிலிருந்தாலும் அதன் கட்டுப்பாட்டு உரிமை முழுவதும் தமிழகத்திற்கே உரித்தானது. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அணை பாதுகாப்பு புதிய சட்ட மசோதா மூலம் தமிழ்நாட்டின் அணைகள் மீதான கட்டுப்பாடுகளும், உரிமைகளும் முற்றிலும் மறுக்கப்படும். அவற்றை பாதுகாப்பதற்குரிய எந்த வழிவகைகளும் இச்சட்ட மசோதாவில் வரையறுக்கப்படவில்லை. எனவே, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை காவுவாங்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அணை பாதுகாப்பு சட்ட மசோதாவை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story