ஐகோர்ட்டின் அனைத்து நுழைவுவாயில்களும் இரவு 8 மணி வரை மூடல்
ஐகோர்ட்டின் அனைத்து நுழைவுவாயில்களும் இரவு 8 மணி வரை மூடல்
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்த ஐகோர்ட்டு வளாகத்தை நீதிபதிகள், வக்கீல்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 107 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கட்டிடம், நிலம் உள்ளிட்டவை ஐகோர்ட்டுக்கு மட்டுமே சொந்தமானது, இந்த சொத்தை யாரும் சொந்தம் கொண்டாடக்கூடாது என்பதற்காக, ஆண்டுக்கு ஒருமுறை டிசம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று சென்னை ஐகோர்ட்டு முழுவதும் 24 மணி நேரம் இழுத்து மூடப்படும். அனைத்து நுழைவுவாயில்களும் பூட்டப்பட்டு, உள்ளே யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். இந்த சொத்தின் மீது ஐகோர்ட்டு நிர்வாகத்துக்கு உள்ள ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்த நடைமுறை பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி சென்னை ஐகோர்ட்டு அனைத்து நுழைவுவாயில்களும் நேற்று இரவு 8 மணி முதல் இழுத்து மூடப்பட்டன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணி வரை, அதாவது 24 மணி நேரத்துக்கு மூடப்பட்டு இருக்கும். இதற்கான அறிவிப்பை சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டார்.
Related Tags :
Next Story