ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை...
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்தினார்.
சென்னை,
தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா தனது 68 வயதில் உயிரிழந்தார். இன்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சசிகலா ஏராளமான தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Related Tags :
Next Story