ஜெயலலிதா போன்றே உடையணிந்து வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பெண்...!


ஜெயலலிதா போன்றே உடையணிந்து வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பெண்...!
x
தினத்தந்தி 5 Dec 2021 10:48 PM IST (Updated: 5 Dec 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

ஷாலு என்ற பெண், ஜெயலலிதா போன்று சேலை,கண்ணாடி என அவரை போன்றே உடையணிந்து வந்து அஞ்சலி செலுத்தினார்.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், ஷாலு என்ற பெண், ஜெயலலிதா போன்று சேலை,கண்ணாடி என அவரை போன்றே உடையணிந்து வந்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஓபிஎஸ், ஈபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில முக்கிய பிரபலங்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், ஷாலு என்ற பெண், ஜெயலலிதா போன்று சேலை,கண்ணாடி என அவரை போன்றே உடையணிந்து வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர், 25 ஆண்டுகளாக அதிமுகவில் உறுப்பினராக இருப்பதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

Next Story