இணையதளத்தில் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பு; பொள்ளாச்சி வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


இணையதளத்தில் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பு; பொள்ளாச்சி வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 5 Dec 2021 11:28 PM IST (Updated: 5 Dec 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

இணையதளத்தில் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த பொள்ளாச்சி வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கரூர், 
ஆபாச படம் 
கரூரில் உள்ள வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் கரூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், எனது கணவரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு புதிய எண்ணில் இருந்து ஒரு பெண்ணின் ஆபாச படம் வந்தது.
பின்னர் அந்த எண்ணில் இருந்து மர்ம ஆசாமி ஒருவர் எனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு இதைபோல் உனது மனைவியின் ஆபாச படம் என்னிடம் உள்ளது. அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் எனது கணவர் ஆன்லைன் மூலம் ரூ.49 ஆயிரம் அனுப்பி உள்ளார். பின்னர் மீண்டும் எனது கணவரை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். 
குண்டர் சட்டத்தில் கைது
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதாஞ்சலி தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், வங்கி அதிகாரியின் கணவரிடம் பணம் பறித்தது பொள்ளாச்சியை சேர்ந்த பிரசாத் (வயது 27), அஜித்குமார் (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் அறிவுறுத்தலின்படி, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் படி பிரசாத் குண்டர் தடுப்புச்சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழகத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 2-வது சைபர் குற்றவாளி பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story