ஜெயலலிதா சமாதியில் சசிகலா கண்ணீர் அஞ்சலி டி.டி.வி.தினகரன் தலைமையில் அ.ம.மு.க.வினர் உறுதிமொழி ஏற்றனர்
ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். டி.டி.வி. தினகரன் தலைமையில் அ.ம.மு.க.வினர் உறுதிமொழி ஏற்றனர்.
சென்னை,
5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சசிகலா தனது ஆதரவாளர்கள் புடைசூழ வருகை தந்தார். அவரை தியாகராயநகர் இல்லத்தில் இருந்து ஊர்வலம் போன்று ஆதரவாளர்கள் அழைத்து வந்தனர். ஜெயலலிதா சமாதியின் அருகே வரை சசிகலா கார் வந்தது.
ஆதரவாளர்களின் வாழ்த்து கோஷங்களுக்கு இடையே சசிகலா ஜெயலலிதா சமாதிக்கு சென்றார். அவரது சமாதியின் அருகே விழுந்து வணங்கினார். பின்னர் மலர்வளையம் வைத்து கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் செந்தமிழன், நடிகை சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
காரில் அ.தி.மு.க. கொடி
பின்னர் ஜெயலலிதா சமாதி அருகிலேயே சசிகலா தலைமையில் அவரது ஆதரவாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, சசிகலா தலைமையில் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சசிகலா அ.தி.மு.க. கொடி பொருத்திய காரில் வந்தார். அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க. கொடியுடன் அவரை வரவேற்றனர்.
டி.டி.வி.தினகரன் தனியாக அஞ்சலி
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் அக்கட்சியினர் தனியாக ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி ஏற்ற அதே இடத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையில் அ.ம.மு.க.வினரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சசிகலா ஆதரவாளர்கள் அவரது தலைமையிலும், அ.ம.மு.க.வினர் டி.டி.வி.தினகரன் தலைமையிலும் வென்று காட்டுவோம் என்று தனித்தனியாக உறுதிமொழி எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.

Related Tags :
Next Story