மாணவிக்கு பாலியல் தொல்லை: ரெயில்வே அதிகாரி கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை: ரெயில்வே அதிகாரி கைது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் ரெயில் நிலைய அதிகாரியாக (ஸ்டேஷன் மாஸ்டர்) பணிபுரிந்து வருபவர் சாகர் நாகாக் (வயது 37). ஒடிசாவை சேர்ந்த இவர் அந்த ரெயில் நிலையம் வழியாக பள்ளிக்கு சென்ற 11 வயதுடைய 6-ம் வகுப்பு மாணவியிடம் வண்ண முககவசம் தருவதாக கூறி, தன்னுடைய செல்போனில் இருந்த ஆபாச படங்களை காட்டி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி மாணவியின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாகர் நாகாக்கை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story