மாநில செய்திகள்

கடன் தொல்லையால் விபரீதம் மனைவி, மகனுடன் கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Debt-ridden wife commits suicide by hanging college professor with wife and son

கடன் தொல்லையால் விபரீதம் மனைவி, மகனுடன் கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் விபரீதம் மனைவி, மகனுடன் கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
கடன் தொல்லை காரணமாக கல்லூரி பேராசிரியர், மனைவி, மகனுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சுப்பன்னமுதலி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 66). சோளிங்கரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அனுராதா (57). இவர்களுக்கு விஷ்ணு (29), பரத் (28) என்ற 2 மகன்கள். இதில் மூத்த மகன் விஷ்ணு பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.


இளைய மகன் பரத் கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்தார். தற்போது அவர் வீட்டில் இருந்தப்படியே பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் ராமலிங்கத்தின் தம்பி சிவகுமார், தனது அண்ணனை பார்க்க நேற்று மாலை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் படுக்கையறையில் ராமலிங்கம், அவரது மனைவி அனுராதா ஆகிய இருவரும் தனித்தனியாக தூக்கில் பிணமாக தொங்கினர். மற்றொரு அறையில் பரத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதை கண்டு சிவகுமார் அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கடன்தொல்லை

முதல்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் ராமலிங்கம் மற்றும் பரத் ஆகிய இருவரின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஷேர் மார்க்கெட்டில் ரூ.25 லட்சம் நஷ்டம்: பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை
ஷேர் மார்க்கெட்டில் ரூ.25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தி அடைந்த பட்டதாரி வாலிபர். உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்தார்.
2. படிப்பு பாதியில் நின்று விடுமோ என்ற அச்சத்தில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
படிப்பு பாதியில் நின்று விடுமோ என்ற அச்சத்தில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.
3. அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை
அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 5-வது மாடியில் இருந்து குதித்து கப்பல் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
4. அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை
அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 5-வது மாடியில் இருந்து குதித்து கப்பல் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
5. ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்தவர் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்தவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.