தஞ்சை: பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட விவகாரம் - தாய் கைது


தஞ்சை: பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட விவகாரம் - தாய் கைது
x
தினத்தந்தி 6 Dec 2021 8:13 AM IST (Updated: 6 Dec 2021 8:17 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தாய் பிரியதர்ஷினி என்பவர் கைது செய்ய்ப்ப்பட்டுள்ளார்.

தஞ்சை,

தஞ்சையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கழிவறைக்குள் கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. பிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு அவசர சிகிச்சைப் பிரிவு கழிவறைக்குள் நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

இது குறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தி வநதனர்.

இந்நிலையில், பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை நடத்திய விசாரணையில் குழந்தையின் தாய் தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்த பிரியதர்ஷினி என தெரியவந்தது. இதையடுத்து  தாய் பிரியதர்ஷியை போலீசார் கைது செய்தனர். முறையற்ற உறவில் பிறந்ததால் குழந்தையை கொன்றதாக தாய் பிரியதர்ஷினி போலீசார் விசாரணையில் தெரிவித்தார்.

Next Story