10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை -சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை காலமான தற்போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் சில நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நெல்லை ,தென்காசி ,தேனி, மதுரை, விருதுநகர் , திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மட்டுமின்றி கரூர் , நாமக்கல் ,திருப்பூர் , திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story