சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு
x
தினத்தந்தி 7 Dec 2021 10:39 AM IST (Updated: 7 Dec 2021 10:39 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலை சந்தையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து 36 ஆயிரத்து 000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ. 4,500- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 65 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story