மாணவர் மணிகண்டனின் மர்ம மரணம்: நீதி நிலைநாட்டப்பட வேண்டும் - கமல்ஹாசன்
கல்லூரி மாணவர் மணிகண்டனின் மர்ம மரணம் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவர் உயிரிழந்தார். போலீசார் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.
இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில்,
முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தில் மறு உடற்கூராய்வு செய்யவேண்டுமெனும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மநீம வரவேற்கிறது. வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தில் மறு உடற்கூராய்வு செய்யவேண்டுமெனும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மநீம வரவேற்கிறது. வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 8, 2021
Related Tags :
Next Story